சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!



Social Media Trend about Suba Vee Kolathur Mani Sundaravalli Panmilar Periyarist Video

தங்களை பெண்ணியவாதிகள், புரட்சியவாதிகள் என்று தமிழகத்தில் அடையாளப்படுத்தும் சிலரின் மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் உட்பட பிற புகார்கள் போன்றவை முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ் தேசியம் என்ற முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முகநூலில் லுலு என்பவரின் குழுவில் நடைபெறுவதை சிலர் தமிழகத்தில் வெளிப்படையாக செய்கிறார்கள். பெரியாரிஸ்டுகள் குறித்து பிரான்ஸ் தமிழ்ப்பெண் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பெண் பேசியிருப்பதாவது, "திருமணம் தாண்டிய உறவுகளையும் (கள்ளக்காதல்), அது சார்ந்த கோட்பாடுகளையும் அப்பட்டமாக தமிழ் கலாச்சாரத்தில் திணிப்பது சுந்தரவல்லி மற்றும் பனிமலர் பன்னீர் செல்வம் தான். இவர்கள் முகநூலில் லுலு என்பவர் பேசி வருவதை தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள். கொளத்தூர் மணி மறைத்ததை, ஓவியாவும் மறைகிறார். 

கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பெண்ணுடன், சுப.வீ உடல் ரீதியான உறவு கொண்டதாக பிரச்சனை நடக்கிறது. இதனால் பெரியார் அமைப்பில் சர்ச்சை நிலவி விவாதம் நடக்கும் போது, ஓவியா அவரின் தனிப்பட்ட விஷயம் என்று கூறுகிறார். பாலியல் சுரண்டல் குறித்து பார்க்கும் போது, சுப.வீ செய்தது கொள்கைக்கு எதிரானது. இந்த பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனை என பெரியார் அமைப்பில் பேசுகிறார்கள். அவர்களை யாரும் கண்டிக்கவில்லை. 

இதனால் சமூக சீரழிவு அதிகரிக்கிறது. இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால், புரட்சி பேசுபவர்கள் பெண்களை அவர்களின் கொள்கைக்கு எதிராக பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடரும். அது வெளியுலகுக்கு தெரியாமல் நடக்கும். பெண்களுக்கு பெண்ணியம் தொடர்பான முழு புரிதல் இல்லாவிட்டாலும், அதனை மேடையில் பேசினால் மட்டும் போதாது. நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று பேசுகிறார். இந்த வீடியோ பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.