தமிழகம்

மூன்று மாதமாக வீட்டில் உள்ள ஏ.சிக்குள் குடும்பம் நடத்திய பாம்பு! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

snake in AC


பாண்டிச்சேரியில் ஏழுமலை என்பவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சியை ஆன் செய்துள்ளார். அப்போது ஏ.சிக்குள் இருந்து வித்யாசமான சத்தம் கேட்டது. ஒரு பக்கத்திலிருந்து மட்டும் காற்று வந்துள்ளது. இதனால் ஏ.சி. பழுதாகிவிட்டது என்று அதை உடனே நிறுத்திவிட்டார்.

இதனையடுத்து நேற்று காலை ஏ.சி. மெக்கானிக்கை அழைத்துவந்துள்ளார் சர்வீஸ் செய்வதற்காக. அப்போது ஏசியைக் கழற்றியபோது அதனுள் 3 பாம்பின் தோல்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுள்ளார். இந்தநிலையில் அவரின் கையில் இருந்த ஸ்க்ரூ டிரைவரால் அந்தத் பாம்பு தோல்களை அகற்றியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சுமார் 2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு வேகமாகச் சென்று ஏ.சியின் மற்றொரு புறத்தில் மறைந்துகொண்டது.

ac க்கான பட முடிவு

இதையடுத்து ஏழுமலை வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஏழுமலை வீட்டிற்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி பாம்புக்குக் காயம் ஏற்படாமல் அதைப் பிடித்து காட்டிற்குள் விட்டுள்ளனர். அங்கு 3 பாம்பு தோல்கள் இருப்பதைப் பார்க்கும்போது சுமார் 3 மாதங்கள் அந்தப் பாம்பு ஏ.சிக்குள் தங்கியிருக்கிறது என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
 


Advertisement