பெண்கள் விடுதியில் கண்ணாடி முன்பு நின்று படமெடுத்த 7 அடி நாகப் பாம்பு! அதிர்ச்சியடைந்த மாணவிகள்! வைரல் வீடியோ!

பெண்கள் விடுதியில் கண்ணாடி முன்பு நின்று படமெடுத்த 7 அடி நாகப் பாம்பு! அதிர்ச்சியடைந்த மாணவிகள்! வைரல் வீடியோ!



snake at ladies hostel


கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக பல மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் சில மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் திடீரென பெண்கள் விடுதிக்குள் நீளமான நல்ல பாம்பு புகுந்ததால், அதனைப்பார்த்த மாணவிகள் கூச்சலிட்டு அலறி ஓடினர். விடுதிக்குள் புகுந்த அந்த ஏழு அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு விடுதிக்குள் இங்கும் அங்குமாக ஓடியது. இதனைப்பார்த்து அலறல் சத்தம் போட்டுள்ளனர் மாணவிகள். 

பின்னர் மாணவிகளின் சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி காப்பாளர், வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பாம்பை பிடித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.