கவர்ச்சி ரொம்ப தூக்கலா இருக்கே.?! தர்ஷா குப்தாவின் தரமான கிளாமர் கிளிக்ஸ்.!Actress Dharsha kupta beautiful and glamour pictures Viral

கடந்த 2017 ஒளிபரப்பு செய்யப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் முள்ளும் மலரும் தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த தொடரில் அவர் விஜி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், இவருக்கு நிறைய பாராட்டுக்கள் மற்றும் ரசிகர்கள் கிடைத்தனர்.

Dharsha kupta

இதனை தொடர்ந்து செந்தூரப்பூவே, மின்னலே போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்ற தர்ஷா குப்தா அதன்பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு அதிகப்படியான பிரபல தன்மை கிடைத்த நிலையில் சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர், கே பி ஒய் காமெடி திருவிழா போன்ற பல நிகழ்ச்சிகளில் இவர் விருந்தினராக கலந்து கொண்டார். 

Dharsha kupta

தொடர்ந்து இவருக்கு திரௌபதி புகழ் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகிய ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இதனால், அவர் வெள்ளி திரையில் கால் பதித்து மேலும் பிரபலமடைந்தார். சிறந்த அறிமுக நடிகைக்கான எஃப்.ஏபி விருதை அவர் பெற்றிருந்த நிலையில் அதன் பின் அவருக்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் நீண்ட நாட்களுக்கு கிடைக்கவில்லை. 

Dharsha kupta

பின்னர், ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் அவர் நடித்த நிலையில் தற்போது மெடிக்கல் மிராக்கள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.