#Breaking: இந்தியாவே பெருமிதம்..! நடிகை கரீனா கபூர் யுனிசெப் நிறுவனத்தின் இந்திய தூராக நியமனம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!



Actress Kareena Kapoor Khan as UNICEF India National Ambassador 

 

ஐநாவின் யுனிசெப் (UNISEF) அமைப்பு, தொடர்ந்து 75 ஆண்டுகளாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இன்று அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான தேசிய தூதராக நடிகை கரீனா கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இனி வரும் நாட்களில் நடிக்க கரீனா இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தை பருவ வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி செயல்படுவார்.

கடந்த 75 ஆண்டுகளாக யுனிசெப் அமைப்பு இந்தியாவில் மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த அரசுக்கு வழிவகை செய்துள்ளது. 

இந்நிறுவனம் குழந்தைகள், பெண்கள், சுகாதாரம், ஊட்டச்சத்து, நீர் மற்றும் சுகாதாரம், கல்வி ஆகியவற்றை ஊக்குவிக்க தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.