ரூ.50 இலட்சம் கடன் வாங்கி மோசடி? பிரபல நடிகருக்கு ஆப்படித்த சென்னை உயர்நீதிமன்றம்.!actor-yugi-sethu-loan-issue-chennai-hc-order

 

தமிழில் பஞ்ச கேந்திரம் உட்பட பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் யூகி சேது. இவர் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ரூ.50 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார். 

இந்த கடனை செலுத்தாமல், அதற்கான வட்டியை கொடுக்காமலும் அவர் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நடிகர் யூகி சேது ரூ.50 இலட்சம் கடன் மற்றும் அதற்கான 9% வட்டி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.