இந்தியா

இருசக்கர வாகனத்தில் சென்ற 12ம் வகுப்பு மாணவி.! கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்.!

Summary:

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த அந்த 12ம் வகுப்பு மாணவி மே 31ம் தேதி பக்வான்பூர் த

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த அந்த 12ம் வகுப்பு மாணவி மே 31ம் தேதி பக்வான்பூர் திம்ரி பகுதியை நோக்கி தனது ஆண் நண்பர்கள் இருவருடன், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த 6 இளைஞர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியின் ஆண் நண்பர்கள் இருவரையும், அந்த இளைஞர்கள் பலமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர்கள் அந்த மாணவியை கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி வேதனையுடன் தவித்து வந்துள்ளார். மனைவியிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை நேற்று கைது செய்ய முயன்ற போது பதுங்கியிருந்த அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், இதைத் தொடர்ந்து காவல்துறையினரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விஷால் படேல் மற்றும் அனுஜ் படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


Advertisement