தமிழகம் ஆன்மிகம்

அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் ஒற்றுமையாய் இருக்கும், தெப்பத்திற்கு பேர்போன அரிமளத்தில் கும்பாபிஷேகம்!.

Summary:

sivan temple Consecrated in arimalam


தேர் என்றாள் அனைவருக்கும் ஞாபகம் வருவது திருவாரூர் தான். அதேபோல் தமிழகத்தில் தெப்பத்திற்கு பேர் போன ஊர் அரிமளம் தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம் நிறைந்த ஊர் என்றால் அது அரிமளம் தான். அரிமளத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழ்கின்றனர். 

அரிமளத்தில் கிறிஸ்தவ ஆலயங்களும், இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதிகளும் அமைந்துள்ளது அப்பகுதியில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். அதேபோல் அரிமளத்தில் வழிபாட்டிற்காக கோவிலுக்கு சென்றால், சாமி கும்பிடவே ஒரு நாட்கள் ஆகிவிடும். அந்த அளவிற்கு அதிகப்படியான கோயில்கள் உள்ளன. 

அரிமளத்தில் உள்ள பிரம்மாண்டமான சிவன் கோவில், முற்றிலும் கற்களால் செதுக்கப்பட்ட மிகப் பெரிய கோவிலாகும். அதனையடுத்து பக்தர்கள் தினந்தோறும் வழிபடும் விளங்கி அம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அதனையடுத்து ஆஞ்சநேயர் திருக்கோவில், காமாட்சியம்மன் திருக்கோவில், சுந்தரேஸ்வரர் திருக்கோவில், பெருமாள் கோவில், சுந்தர சுவாமிகள் திருக்கோவில், காளியம்மன் திருக்கோவில், அய்யனார் திருக்கோவில், முருகன் கோவில், விநாயகர் திருக்கோயில், முனீஸ்வரர் திருக்கோயில், இதனை அடுத்து ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். 

தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களும், குளமும் உள்ள பகுதி  அரிமளம் ஆகும். இந்நிலையில் அரிமளத்தில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, டிசம்பர் மாதம் 12ம் தேதி கும்பாபிஷேக விழா அதி விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் புண்ணியமான ஒரு ஒரு விஷயமாகும். ஏனென்றால் கும்பாபிஷேகத்தில் தேவர்களும் கலந்து கொள்வார்கள் என்பது ஐதீகம். இதனால் அனைவரையும் விழாவில் கலந்துகொள்ள அந்த ஊர் மக்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள்.


Advertisement