பெண் என்றும் பாராது கொடூரம்... அரசியல் பிரச்சனையில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்..!

பெண் என்றும் பாராது கொடூரம்... அரசியல் பிரச்சனையில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்..!


Sivaganga Politics Woman Attacked by DMK Supporters

தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரின் மாமியாரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அகிலாண்டபுரம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரின் மனைவி ராதா. ராதா சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் பதவியை பெற்றார். 

இந்த தேர்தல் நேரத்தில் ராதாவிற்கும் - திமுக சார்பில் களம்கண்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் கட்சி மோதல் அவ்வப்போது நிகழ்வதும் வழக்கம். இந்த நிலையில், நேற்று இருதரப்பு மோதல் நடந்துள்ளது. 

இந்த சமவாதில், திமுக பிரமுகரான ஜெயமணி கணேசன் உறவினர்களுடன் சேர்ந்து ராதாவின் வீடிற்குள் புகுந்து ராதா மற்றும் அவரின் மாமியாரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.