ஆசையாக வந்த சகோதரர்! குழி வெட்டி காத்திருந்த சகோதரி! சினிமாவை மிஞ்சிய கொடூர சம்பவம்.

ஆசையாக வந்த சகோதரர்! குழி வெட்டி காத்திருந்த சகோதரி! சினிமாவை மிஞ்சிய கொடூர சம்பவம்.


sister-killed-brother-and-brother-wife-in-madhurai

மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகனின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க வெள்ளக் கோவிலில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு மனைவியுடன் காரில் சென்றுள்ளார். பத்திரிக்கை வைக்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.

இதனால் செல்வராஜின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து விசாரணியில் இறங்கிய போலீசார் செலவராஜ் மற்றும் அவரது மனைவி சென்ற கார் கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

Crime

பின்னர் இதுகுறித்து செலவராஜின் தங்கை கண்ணம்மாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தனது அண்ணன் மற்றும் அண்ணியை தான்தான் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக கண்ணம்மா ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் மட்டும் இந்த இரண்டு பேரை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகப்படும் போலீசார் கண்ணம்மாவின் மகள் மற்றும் மருமகனையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பரம்பரை சொத்தை விற்றதால் கண்ணம்மா செல்வராஜை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இருவரின் உடலை மீட்ட பிறகே அவர்கள் எப்படி கொலைசெய்யப்பட்டார்கள் என தெரியவரும் என போலீசார் கூறியுள்னனர்.