சினிமா

சகோதரர்களின் வெறிச்செயல்! தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சகோதரி! பரபரப்பு சம்பவம்!!

Summary:

சகோதரர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டு இருவரும் கடுமையாக தாக்கி கொண்ட நிலையில் அதனை தடுக்

சகோதரர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டு இருவரும் கடுமையாக தாக்கி கொண்ட நிலையில் அதனை தடுக்க வந்த சகோதரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாத்திமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு கிருஷ்ணன் என்ற சகோதரர் உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இருவரும் மீண்டும் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுகொண்டுள்ளனர். அப்பொழுது சரவணன் என்பவர் அங்கிருந்த சர்பத் பாட்டிலை எடுத்து கிருஷ்ணனை தாக்க முயற்சி செய்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது சகோதரி சரசு என்பவர் அதை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது சர்பத் பாட்டில் அவரது தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் ஊற்றியுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் சரசுவை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Advertisement