கொஞ்சம்பொரு கொரோனாவை ஒழிக்கிறேன்னு சவால் விட்ட தணிகாசலத்தின் தற்போதைய பரிதாப நிலையை பாருங்க..! அம்பலமான உண்மை..!

கொஞ்சம்பொரு கொரோனாவை ஒழிக்கிறேன்னு சவால் விட்ட தணிகாசலத்தின் தற்போதைய பரிதாப நிலையை பாருங்க..! அம்பலமான உண்மை..!


Sidha doctor thanikachalam arrested

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் அணைத்து நாடுகளும் போராடிவருகிறது.

இதனிடையே தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், ஒரே நாளில் தன்னால் கொரோனாவை குணப்படுத்தமுடியும் என சமூக வலைத்தளங்களில் செய்தி பதிவிட்டு வந்தார்.

மேலும், இந்திய அரசும், தமிழக அரசும் தனது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து கூறிவந்தார். அதுமட்டும் இல்லாது, தனது மருந்து மூலம் வெளிநாட்டில் வாழும் பல்வேறு தமிழர்களை தான் குணப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் கூறும் ஆடியோ, வீடியோவையும் தணிகாசலம் பதிவிட்டுவந்தார்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தணிகாசலம் சித்த மருத்துவரே இல்லை என்பதும், அவர் ஒரு போலி மருத்துவர் என்பதும் தெரியவந்ததை அடுத்து, தற்போது அவரை கைது செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.