கள்ளக்காதலால் நடந்த கொடூரம்.. மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவன்.. சிக்கியது எப்படி? திக்., திக்..!
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் காவல் துறையினரின் விசாரணைக்குப்பின் கைதாகி இருக்கிறார்.
கிணற்றில் சடலம்:
Coimbatore Shocker: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கோபி ராசிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை தனிநபர் குத்தகைக்கு எடுத்து மண்டபமாக மாற்றும் பணிகளை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஆலையில் இருக்கும் கிணற்றில் சம்பவத்தன்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!
துப்பு துலங்கியது:
அப்போது, சாக்கு மூட்டை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நிலையில், அதனை மீட்டபோது 35 வயதுடைய பெண்ணின் உடல் இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன்னதாக பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் பணியை முடித்துக்கொண்டு சம்பளத்தை பெற்று சொந்த ஊர் சென்றது உறுதியானது.

சோட்டா லால்:
இதனையடுத்து, தனிப்படை அதிகாரிகள் பீகார் விரைந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, அன்னூர், கருக்கிலியம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட வடமாநில இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் பீகாரைச் சேர்ந்த சோட்டா லால் மண்டல் (வயது 28) என்பது தெரியவந்தது. விசாரணையில், அவரின் மனைவி சங்கீதா (வயது 34) கொலை செய்யப்பட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
கள்ளக்காதல் விவகாரம்:
விசாரணையில், மனைவி சங்கீதாவுக்கு பல ஆண்களுடன் உறவு இருந்ததை பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை. சம்பவத்தன்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் உறங்கியபின், மனைவியை அழைத்து கண்டித்தேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின் கிணற்றில் சடலத்தை வீசினேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லாலை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சலூன் கடை பழக்கம் உயிரை காவு வாங்கிய சோகம்.. வனப்பகுதியில் அரங்கேறிய படுகொலை.!