சலூன் கடை பழக்கம் உயிரை காவு வாங்கிய சோகம்.. வனப்பகுதியில் அரங்கேறிய படுகொலை.!
வழக்கு வாபஸ் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
அடையாளம் தெரிந்தது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், பாப்பநல்லூர் வனப்பகுதியில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து உத்திரமேரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட அப்பர் பருத்திக்கொல்லை கிராமத்தில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் குமார் (வயது 38) என்பது உறுதியானது.
இதையும் படிங்க: கணவர், மாமனாரை கள்ளக்காதலுக்கு பலிகொடுத்த மனைவி.. கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவத்தின் ஷாக் பின்னணி.!
துப்பு கிடைத்தது:
இதனையடுத்து, சுரேஷின் மரணம் தொடர்பாக அவரின் மனைவி கல்பனாவிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்குப்பின், இறுதியாக சுரேஷ் குமார், சம்பத் (வயது 48) என்பவருடன் இறுதியாக சென்றது தெரியவந்தது. இவர் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருகிறார். சலூன் கடையும் நடத்தி வந்துள்ளார். இறுதியாக சுரேஷை இவரே தொடர்புகொண்டு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
கடைக்கு சென்று வந்தபோது பழக்கம்:
சம்பத்தின் செல்போன் நம்பரை வைத்து திருமுல்லைவாயல் சென்ற அதிகாரிகள், சம்பத் மற்றும் அவரது சகோதரர் தியாகு ஆகியோரை உத்திரமேரூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, சுரேஷின் கொலைக்கான மர்மம் விலகியது. அதாவது, பாப்பநல்லூரில் சலூன் கடை நடத்தி வரும் சம்பத் கடைக்கு சுரேஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ்வப்போது ஒன்றாக மதுவும் அருந்தி வந்துள்ளனர்.
பெருமை பேசினார்:
சம்பவத்தன்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல்நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். இத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பத்திடம் விசாரணை நடந்து வந்துள்ளது. பேச்சுவார்தைக்குப்பின் சுரேஷ் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். வழக்கை வாபஸ் பெறாவிட்டால் சுரேஷின் நிலைமை மோசமாகியிருக்கும் என சம்பத் பலரிடமும் பெருமை பேசி இருக்கிறார்.
கொலை சம்பவம்:
இதனிடையே, வழக்கை வாபஸ் வாங்கியதற்கு சுரேஷ் பணம் வேண்டும் என சம்பத்திடம் கேட்டுள்ளார். சம்பத் 3 மாதமாக இழுத்தடித்து வந்த நிலையில், சம்பவத்தன்று வனப்பகுதிக்கு சுரேஷை வரச்சொல்லி மதுபானம் அருந்தி இருக்கின்றனர். இந்த சமயத்தில் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, அங்கு கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது என்பது உறுதியானது. விசாரணைக்குப்பின் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலியை திருமணம் செய்ய அண்ணனிடம் பெண் கேட்ட இளைஞர்.. கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.!