கணவர், மாமனாரை கள்ளக்காதலுக்கு பலிகொடுத்த மனைவி.. கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவத்தின் ஷாக் பின்னணி.!



Krishnagiri Double Murder Shock: Woman, Lover Arrested for Killing Husband and Father-in-Law Over Illicit Affair

மனைவியின் கள்ளக்காதல் கணவரையும், அவரது தந்தையையும் காவு வாங்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

எரிக்கப்பட்ட சடலம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை, ஆலம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலை ஓரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதே சாலையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு உடல் தென்னை ஓலை, பெட்ஷீட் மீது வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

அடையாளம் தெரிந்தது:

இந்த விஷயம் குறித்த தகவல் அந்த காவல்துறையினர், இரண்டு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, கொலைகான நபர்கள் கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (வயது 43), அவரது தந்தை செல்லப்பன் (வயது 74) முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது.

Krishnagiri 

கள்ளக்காதலுக்காக கொலை:

இந்த கொலை வழக்கு தொடர்பாக மகேஷ் குமாரின் மனைவி பானுப்பிரியா (வயது 38) மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது கள்ளக்காதலன் பூவரசன் (வயது 24) என்பவருடன் சேர்ந்து கணவர் மற்றும் மாமனாரை கொலை செய்ததாக கூறியிருக்கிறார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கணவருக்கு தெரியவந்தது:

ஜம்மு காஷ்மீரில் மகேஷ்குமார் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் தந்தையும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பானுப்பிரியாவுக்கு மேல் கொட்டாய் பகுதியில் வசித்து வரும் ஓட்டுநர் தளபதி என்ற பூவரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்த நிலையில், இந்த தகவல் மகேஷ் குமாருக்கு தெரியவந்தது. 

அடுத்தடுத்து தகராறு:

இதனையடுத்து, விடுமுறை எடுத்து வீட்டுக்கு வந்தவர் மனைவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். மனைவி உண்மையை கூறாததால் அவரின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதிலிருந்த தகவல் அனைத்தையும் பார்த்தவர் மனைவியின் கள்ளக்காதலை உறுதி செய்த நிலையில், மதுபோதையில் மகேஷ் குமார் தகராறு செய்ய தொடங்கி இருக்கிறார். 

Krishnagiri

அரங்கேறிய கொலை:

இதனிடையே, இந்த விஷயம் குறித்து பானுப்பிரியா தனது கள்ளக்காதலன் பூவரசனுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். அவர் மகேஷ் குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது பானுப்பிரியா கணவரை பிடித்துக் கொள்ள, பூவரசன் அவரை கத்தியால் குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் மகேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். மேலும், சத்தம் கேட்டு வந்த தந்தை செல்லப்பன், இதே paaniyil கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஜோடியாக கைது:

பின் இரண்டு உடல்களையும் சாக்கு முட்டையில் தனித்தனியாக கட்டி டீசல் வாங்கி வந்து தனித்தனியே வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் கள்ளக்காதல் ஜோடி கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரியில் நடந்த தந்தை-மகன் இரட்டைக்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!