பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
கழிவறைக்கு சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை.! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
கழிவறைக்கு சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை.! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த, பள்ளியகரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய பெண் ஒருவர். தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தைகள் நலப்பிரிவு வார்டு அருகே தனது குழந்தையுடன் கழிப்பறைக்குச் சென்றபோது, ஒரு ஆண் நபர் உள்ளே சென்றுள்ளார்.
அதன்பின், மேற்கண்ட பகுதியில் இருந்த, பெண்ணிடம் இருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு, அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பலாத்காரத்தில் ஈடுபட முயன்று கத்தியை காட்டி மிரட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த நபரை தள்ளிவிட்டு, அவரிடமிருந்து குழந்தையை மீட்டு அங்கிருந்து தப்பினார்.
மேலும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் அந்த நபரை தாக்கியுள்ளனர். ஆனாலும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின், பெண்ணுக்கு பாலியல் முயற்சியும், கொலை செய்து விடுவதாக மிரட்டியவரை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் அந்த நபர் செங்கல்பட்டு, கீழவேடு பகுதியைச் சேர்ந்த சுரேந்தர்(41) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.