AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
முறை தவறிய கர்ப்பம்... பெற்றோர் செயலால் 17 வயது சிறுமி பலி.!! மருத்துவர் கைது.!!
முறையற்ற உறவால் கருக்கலைப்பு செய்ததில் 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கருக்கலைப்புச் செய்த மருத்துவர் மற்றும் செவிலியரை கைது செய்துள்ள காவல் துறையினர் சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் மாணவிக்கு கடந்து சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்.? என விசாரித்த போது அவரது அண்ணன் உறவுமுறையை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அந்தச் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அவரது பெற்றோர் ஆந்திராவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று கருக்கலைப்பு செய்த பின்பு வீடு திரும்பிய சிறுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதையும் படிங்க: போலி டாக்டரால் பறிபோன உயிர்.!! 22 வயது இளைஞருக்கு நேர்ந்த துயர முடிவு.!!
இதனையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிலைமை மோசமானதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் மற்றும் செவிலியர்களை கைது செய்துள்ள காவல் துறை அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: கோபியில் அதிர்ச்சி... 15 வயது சிறுமி கர்ப்பம்.!! 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.!!