தமிழகம் Covid-19

கொரோனாவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி!

Summary:

senior nurse died by corona


சென்னையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 58 வயதான பெண் தலைமை செவிலியர் பணியாற்றி வந்துள்ளார். இவர் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்தநிலையில் தலைமை செவிலியர், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல், தலைமை பெண் செவிலியர் இவராவார்.


Advertisement