பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா? அமைச்சரின் விளக்கம்!

பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா? அமைச்சரின் விளக்கம்!


sengottaiyan-talk-about-quartaly-leave


5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனநல மருத்துவர் கூறியதையடுத்து 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும், ஆனால், அதற்கு 3 ஆண்டுகள் தமிழகத்துக்கு விலக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே விதமாக பொதுத்தேர்வு நடப்பது போல், இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

sengottaiyan

இதே போல், இந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என்றும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பற்றியும், காலாண்டு தேர்வு விடுமுறை குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்று வதந்தி பரவி வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் அதை நம்ப வேண்டாம். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என தெரிவித்தார். வழக்கம் போல் காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்பு, காந்தி ஜெயந்தியன்று மட்டும் பள்ளி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.