நாம் தமிழர் கட்சியை ஏளனமாக பேசிய பிரதான கட்சிகள்!! தேர்தல் மூலம் பதிலடி கொடுத்த சீமான்!!

நாம் தமிழர் கட்சியை ஏளனமாக பேசிய பிரதான கட்சிகள்!! தேர்தல் மூலம் பதிலடி கொடுத்த சீமான்!!



seeman-will-come-as-a-good-politician


இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில்நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களை வேட்பாளர்களாக  தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன சில காட்சிகள்.

NTK

இந்தநிலையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது.

இந்த தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என கூறப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் உருவெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது.