நாம் தமிழர் ஆட்சியில் ஆணவக்கொலையோ, பாலியல் வன்கொடுமை கொலையோ நடந்தால் இதுதான் கதி.! சீமான்

நாம் தமிழர் ஆட்சியில் ஆணவக்கொலையோ, பாலியல் வன்கொடுமை கொலையோ நடந்தால் இதுதான் கதி.! சீமான்


seeman talk about aanavakolai

நாம் தமிழர் ஆட்சியில் ஆணவக்கொலையோ, பாலியல் வன்கொடுமை கொலையோ நடந்தால் குற்றவாளிகள் உயிருடன் இருக்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திலீபன் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, சாதி ஓட்டு பொய்விடும் என்ற பயத்தில் தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் முருகேசன் - கண்ணகி ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிடவில்லை. சாதி பார்ப்பவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நான் சாதிக்க வந்தவன் சாதிக்கு வந்தவன் இல்லை.

முருகேசன் - கண்ணகி வழக்கில் ஜயா உத்தமராச வழங்கிய தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் எங்கள் ஆட்சிகாலங்களில் குடி பெருமை கொலையோ, பாலியல் வன்கொடுமை கொலையோ நடக்காது, என்ற நிலைமையை உருவாக்குவோம். நடந்தால் அவர் உயிரோடு இருக்க முடியாது என தெரிவித்தார்.