அரசியல் தமிழகம்

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்த சீமான் பலே ஐடியா! அவர் சொல்ற மாதிரி நடந்தா நல்லாதான் இருக்கும்

Summary:

Seeman idea to develop govt hospitals

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நல்லது செய்வோம் என்று எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பதை விட, ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுதளை சுட்டிக்காடி வாக்கு சேகரிப்பதே இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதைத் தான் நாமும் கைத்தட்டி ரசிக்கிறோம். 

இந்தமாதிரி பிரச்சார பேச்சுகளில் கைத்தேர்ந்தவர் தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான். இவர் எந்த கட்சியையும் விடுவதில்லை. இன்று கூட கடலூர் மாவட்டம் வடலூரில், கடலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய சீமான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை கட்டாயம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம். இப்படி செய்தால் நிச்சயம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கும் என்றார். 

மேலும் இதுகுறித்து பேசிய அவர், ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளிலே போயிருக்கும். ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்பல்லோ செல்கிறார், கருனாநிதிக்கு சரியில்லை என்றால் காவேரி செல்கிறார், அப்படி என்றால் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று தானே அர்த்தம். 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் முதல் மனிதனுக்கு கிடைக்கும் அதே மருத்துவம் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க செய்வோம் என்றார். இவர் சொல்வதுபோல் எல்லாம் நடந்தால் நிச்சயம் மக்களுக்கு பெரிய சுமை குறைந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. 


Advertisement