தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நெஞ்சை உலுக்கிய மரணம்! தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுத சீமான்! கண்கலங்க வைக்கும் துயர சம்பவம்!
நாகப்பட்டினம் மாவட்டம் பர்கூர் அருகே உள்ள விலைப்பட்டியல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அன்புச்செழியன் என்கின்ற அன்பு இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்
கார் டிரைவர் அன்பு செழியன் பொதுக்கூட்டங்கள் கட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் சீமானுடன் கலந்துகொண்டுள்ளார். மேலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் சீமானுக்கு மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் திடீரென எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அன்புவின் மரண செய்தி கேட்ட சீமான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க தில்லைப்பட்டினம் கிராமத்திற்கு விரைந்த அவர் அன்புச்செழியனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் தலையில் அடித்துக்கொண்டு கதறியுள்ளார். இது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
அதனை தொடர்ந்து அன்புச்செழியன் இறுதிசடங்கில் சீமான் அவரது உடலை தனது தோளில் சுமந்து இடுகாடு வரை சென்றார். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.