தமிழகம்

தந்தை மீது 2 ஆம் வகுப்பு மாணவி புகார்!. அதிர்ச்சி கரணம்!.

Summary:

second std school girl complaint on her father


வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் இஹஸ்ஸானுல்லாஹ். இவருக்கு 7 வயது நிரம்பிய ஹனீப்பா ஜாரா என்ற  மகள் உள்ளார். 

ஹனிப்பா ஜாரா வீட்டில் கழிப்பறை இல்லாததால், தன் தந்தையிடம் கழிவறையை கட்டிக்கொடுங்கள் அப்பா என பலமுறை கூறியிருக்கிறார். அவரின் தந்தை அதனை சமாளிப்பதற்காக நீ முதல் ரேங் எடு அப்பா உனக்கு கழிவறை கட்டித் தருகிறேன் என தெரிவித்தார். 

vellore :  no toilet in the house, school student file police complaint against her father

ஆனால் எல்.கே.ஜி முதல் 2ம் வகுப்பு வரை ஹனீப்பா முதல் ரேங்க் தான் எடுக்கிறேன். ஆனால் என் அப்பா கழிப்பறை கட்டித் தருகிறேன் என கூறி ஏமாற்றி வருகின்றார் என காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அப்பாவை கைது செய்யுங்கள் என முறையுட்டுள்ளார்.

அவர் கொடுத்த புகாரில், வீட்டில் கழிப்பறை இல்லாத்தால் வெளியே தான் செல்ல வேண்டியுள்ளதால் அவமானமாக இருக்கிறது. அதனால் கழிப்பறை கட்டித்தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி வரும் என் அப்பாவை கைது செய்யுங்கள். அல்லது எப்போது கழிப்பறை கட்டித் தருவார் என்பதை எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
 


Advertisement