'ஆட்சி பங்கு எங்கள் உரிமை' - காங்கிரஸ் போர்க்கொடி.. திமுக தலைமைக்கு தொடரும் சிக்கல்.!
தமிழக காங்கிரஸ் கட்சியினர் திமுக தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசியல்களம்:
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி பிரித்து கொடுப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது என அதிரடியாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சமீபத்திய அரசியல்களத்தில் எழுந்துள்ள ஆட்சியில் பங்கு வாதத்துக்கு, திமுக தலைமை அதிகார பகிர்வுக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என தெளிவாக பதில் அளித்துவிட்டது.
இதையும் படிங்க: BREAKING: டெல்லி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவித்த காங்கிரஸ் கட்சி! பரபரப்பில் அரசியல் களம்!
தொடரும் வாதங்கள்:
DMK Vs Congress: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்கும் சூழலை தொடருகிறது. இதனிடையே, காங்கிரஸ் நாடாளுமன்ற கொறடா மாணிக்கம் தாகூர், சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கேட்டு பதிலடி கொடுத்து வருகிறார். திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபத்தில் காங்கிரசின் கோரிக்கைக்கு எதிராக பேசி இருந்தார்.

தோல்வியுற்ற தொகுதியை கொடுங்கள்:
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தனது வலைப்பதிவில் திமுகவுக்கு எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவித்து இருக்கிறார். அந்த பதிவில், "2021ல் 173ல் போட்டியிட்டு 133 வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்" என தெரிவித்துள்ளார். 2021 தேர்தல் முடிவுகளை வைத்து, திமுக தோல்வியுற்ற தொகுதிகளை காங்கிரஸ் கோருவதாக மாணிக்கம் தாகூரின் பதிவில் தகவல் இடம்பெற்றுள்ளது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிகாரப்பகிர்வு அவசியம், ஆட்சியில் பங்கு காங்கிரஸ் உரிமை என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டணி விஷயத்தில் எந்த சிக்கலும் இல்லை என பேசி வருகிறார்.
மாணிக்கம் தாகூரின் வலைப்பதிவு:
2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 14, 2026
அதிகார பகிர்வு அவசியம்.
ஆட்சி பங்கு எங்கள் உரிமை.
மக்கள் தீர்மானிப்பார்கள். https://t.co/DqLcEeG8yU
இதையும் படிங்க: Nainar Nagendran: தேமுதிகவுடன் கூட்டணி? நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்.!