வழிப்பறி செய்ய முயன்றவர்களை துரத்தி பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு... விடாது துரத்திய காவலர் செங்கல்பட்டில் பரபரப்பு..!

வழிப்பறி செய்ய முயன்றவர்களை துரத்தி பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு... விடாது துரத்திய காவலர் செங்கல்பட்டில் பரபரப்பு..!


Scythe cut the policeman who chased the people who were trying to steal the road..

செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா குற்றப்பிரிவு காவலர் அருள் என்பவர் சாதாரண உடையில் பணியில் இருந்துள்ளார். அப்போது சென்னை நோக்கி சென்ற பைக்கை மற்றொரு பைக்கில் சென்ற இருவர் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதை பார்த்த காவலர் அருள் அவர்களை பிடித்து விசாரித்துள்ளார். 

அப்போது ஒழலூர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (22), என்பவர் கையில் இருந்த கத்தியை எடுத்து காவலர் அருளின் இடது தோள்பட்டையில் வெட்டியுள்ளார். இருவரும் உடனே தப்பி ஓடி உள்ளனர். அவர்களை தொடர்ந்து விடாது துரத்திய காவலர் அருள் சுதர்சனை மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து காவலர் அருளுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு காவல்துறையினர் சுதர்சனிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.