தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நிரம்பிய ஆசிரியர்!! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

Summary:

school teacher forcing sex torture to school girls

தூத்துக்குடி மாவட்டம் தேவர்புரம் ரோட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர் . அந்த பள்ளியில் தூத்துக்குடியை சேர்ந்த பொன்ராஜ் (51) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

அசாசிரியர் பொன்ராஜ் அந்த பள்ளியின் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியி டம்  புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் ஆசிரியர் பொன்ராஜ் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பொன்ராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement