பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்!. காமத்தின் உச்சம்!. கொந்தளித்த மாணவிகள்!.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார்.
பள்ளியில் மைதானத்திற்கு விளையாட வரும், பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது போல, அவர்களை தவறான நோக்கத்தில் மாணவிகளின் உடல்களில் கைவைத்து சில்மிசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் அவர் சில மாணவிகளை, விளையாட்டு அறைக்கு வரவழைத்து, அவர்களிடம் மயக்கும் வகையில் பேசி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போன்று அந்த விளையாட்டு ஆசிரியர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால், மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
பள்ளி முதல்வர் விளையாட்டு ஆசிரியரை கண்டித்துவிட்டு ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில், அவர் மீது புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த, அந்த விளையாட்டு ஆசிரியர், தற்போது தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.