தமிழகம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர். போதை தலைக்கேறி இறுதியில் நடந்த அசிங்கம்!

Summary:

School teacher drunk and fell in class

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். மது குடிக்கும் பழக்கத்தால் அடிக்கடி பள்ளிக்கு வருவது இல்லை.

அப்படி பள்ளிக்கு வந்தாலும் பாதி நாட்கள் மதுபோதையில்தான் வருவதாகவும் மாணவர்களும், அந்த ஊர் மக்களும் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் மதுபோதையில் பள்ளிக்கு வந்தவர் போதை தலைக்கேறி வகுப்பிலையே மயங்கி விழுந்துள்ளார்.

ஏற்கனவே இவரது இந்த பழக்கத்தால் 6 மாத ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் நடிவடிக்கை எடுத்துள்ளார். இப்போது இந்த விவகாரம் பெரிதானத்தை அடுத்து அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement