
School reopening day in tamilnadu 2019
கோடை வெயில் இன்னும் சுட்டெரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பள்ளிகள் திறக்கப்படும் அதே தேதியில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகமும் அன்றே வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள் நெருங்கியும் தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கப்படும் நாளை தள்ளி வைக்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை முன்னிட்டு பள்ளிகள் திறக்கும் தேதியில் மற்றம் ஏற்படலாம் என செய்திகள் வெளியானதை அடுத்து திட்டமிட்டபடி பள்ளிகள் வரும் ஜூன் 3 ஆம் தேதி கட்டாயம் திறக்கப்படும் எனவும், பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement