#Breaking: கனமழை காரணமாக 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!



school-holiday-declared-tomorrow-in-chennai tiruvallur-due-to-h

நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 2 மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய டிட்வா புயல் இலங்கையை புரட்டியெடுத்துவிட்டு தமிழகம் நோக்கி பயணித்த நிலையில், வங்கக்கடலிலேயே வலுவிழந்து விலகிச் சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. 

மழை தொடரும்:

தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் மாநகராட்சி அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகனமழைக்கான ரெட் அலர்ட் திருவள்ளூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட நிலையில், புயல் வலுவிழந்ததால் ரெட் அலர்ட் விளக்கி கொள்ளப்பட்டது. ஆனால், மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Rain Holiday: சென்னை மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

School Holiday

பள்ளிகளுக்கு விடுமுறை:

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நாளைய தினத்தில் திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழை அறிவிப்பால் உத்தரவு.!