#Breaking: செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழை அறிவிப்பால் உத்தரவு.!



heavy-rainfall-alert-schools-and-colleges-closed-in-che

School College Leave: கனமழை தொடருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையை புரட்டியெடுத்த டிட்வா புயல் சென்னையை நோக்கி பயணித்தபடி வங்கக்கடலில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்:

குறிப்பாக வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் அதனை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை பள்ளி சென்ற மாணவர்கள் பலரும் மழையினால் அவதிப்பட்ட நிலையில் சில தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. இதனிடையே நாளை ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Rain holiday

4 மாவட்டத்தில் விடுமுறை:

இதனால் சென்னையில் செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய தினமும் கனமழை எச்சரிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இதையும் படிங்க: Rain Holiday: சென்னை மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!