AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
#Breaking: பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், சென்னையில் செயல்படும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் வங்ககடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி தொடர்ந்து சென்னையை நோக்கி பயணித்து வருகிறது. இந்த புயல் இலங்கையை கடந்த பின்னர் வங்க கடல் வழியாகவே நகர்ந்து பின் கடலிலேயே புயலுக்கு முந்தைய நிலையை அடைந்து வலுவிழுந்தது. இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அரை நாள் விடுமுறை:
மழை காரணமாக காலையிலேயே விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான எந்த அறிவிப்புகளும் இல்லாததால் இன்று பலரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதனிடையே தற்போது மழை விட்டு விட்டு தொடரும் காரணத்தால் சென்னையில் செயல்படும் தனியார் பள்ளிகள் தாமாக முன்வந்து அரை நாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில், சாலைகளில் தண்ணீரும் தேங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. இன்று எங்கெல்லாம் விடுமுறை?.!

மழை தொடரும்:
அதனால் மாணவர்களின் நலன் கருதி அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. வங்ககடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து சென்னை நோக்கிய நகர்ந்து வருவதால் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: இந்த 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை?. டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை! சற்றுமுன் வந்த அலர்ட்.!