AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
Rain Holiday: சென்னை மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
School College Holiday Due to Rain: சென்னையில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையை நெருங்கிய டிட்வா புயல் வங்கக்கடலில் வலுவிழந்தாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில், சென்னையில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியார் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. இன்று எங்கெல்லாம் விடுமுறை?.!
-4bntz.webp)
மக்களுக்கு அறிவுறுத்தல்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒருசில தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!