ஒரே போன் காலில் திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி! பெற்றோர்கள் அதிர்ச்சி!

ஒரே போன் காலில் திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி! பெற்றோர்கள் அதிர்ச்சி!



school girl stopped marriage

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மாம்பட்டு கொல்லக்கொட்டாயை சேர்ந்தவர், 16 வயது பள்ளி மாணவி. அந்த மாணவி அதே ஊரில் அரசு பள்ளியில், 11 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 12 ஆம் வகுப்பிற்கு செல்ல உள்ளார். 

இந்நிலையில் அந்த பள்ளி மாணவிக்கு போளூர் வட்டம் திண்டிவனம் ஊராட்சியை சேர்ந்த 23 வயது ராஜீவ் காந்தி என்ற பால் வியாபாரிக்கு நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்த பள்ளி மாணவி, பெற்றோர்களின் முடிவால் மனவேதனையில் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி திருமணத்திற்கு முந்தைய தினம் ,குழந்தை தடுப்புச் சட்டம் பற்றி ஆசிரியர் பாடம் நடத்தியது ஞாபகத்திற்க்கு வந்த மாணவி உடனே 1098 என்ற எண்ணிற்க்கு போன் செய்து,எனக்கு 16 வயது தான் ஆகிறது, பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.

police

ஆனால் எனது  பெற்றோர், 23 வயது உடைய நபருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்துங்கள் என புகார் அளித்துள்ளார் அந்த மாணவி.

இதனையடுத்து போளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று,மாணவியை மீட்டனர். இந்த சம்பவத்தையடுத்து மணமகன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகினர். பிறகு மாணவியின் பெற்றோர்க்கு போளூர் காவல் துறையினர் அறிவுறை கூறி,மாணவியை திருவண்ணாமலை அரசு காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.