காதலிக்க மறுத்த பள்ளி மாணவி! இளைஞன் சொன்ன ஒத்த வார்த்தையால் நம்பி சென்று ஏற்பட்ட கொடூரம்!

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி! இளைஞன் சொன்ன ஒத்த வார்த்தையால் நம்பி சென்று ஏற்பட்ட கொடூரம்!


school-girl-raped-by-young-boy-LM57JP


விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, அதே பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற கல்லூரி மாணவனுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து எச்சரித்துள்ளனர்.

பெற்றோரின் பேச்சை கேட்டு அந்த மனைவி நரேஷுடன் பழகுவதை தவிர்த்துள்ளார். இதனால் கோபம் அடைந்த நரேஷ், நாம் நட்பாக பழகலாம் என கூறியிருக்கிறார். அதனை ஏற்று அந்த மாணவி  நரேஷுடன் பேசியுள்ளார். போதை பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த நரேஷ், அந்த மாணவியை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

school girl

இந்த நிலையில் அந்த மாணவியிடம்  உன்னை பிரிந்தது எனக்கு மிகவும் மனவேதனையாக இருக்கிறது, உன்னுடன் சில நிமிடங்கள் பேசினால் ஆறுதலாக இருக்கும் என கூறியுள்ளார். அவனின் பேச்சை கேட்டு அந்த மாணவி, நரேஷுடன் பைக்கில் சென்றுள்ளார். அங்கு நண்பனின் அறைக்கு  அழைத்து சென்ற நரேஷ், நான் உன்னை மறக்க வேண்டுமென்றால் என்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என கூறி வற்புறுத்தியுள்ளான்.

நட்பாக பழகலாம் என கூறியதால் தான் உன்னை நம்பி வந்தேன். என்னை விட்டுவிடு என அழுதபடி கூறியுள்ளார் மாணவி. ஆனால் அந்த கொடூரன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளான். இந்நிலையில் டியூசனுக்கு சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஏற்கனவே  நரேஷ் மீது சந்தேகம் இருந்ததால் போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு நடந்த சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து நரேஷ் மற்றும் அவனது நண்பன் இருவரையும் போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.