தமிழகம்

6.5 லட்சம் பேர் பொதுத்தேர்வுகளில் கலந்து கொள்ளவில்லை: பள்ளி கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்..!

Summary:

6.5 லட்சம் பேர் பொதுத்தேர்வுகளில் கலந்து கொள்ளவில்லை: பள்ளி கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுதல் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில்,  8 லட்சம் பேர் எழுதிய 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. 

10 ஆம் வகுப்புக்கு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை.12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10ம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


Advertisement