BREAKING: பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை வாஹினி புற்றுநோயால் மரணம்! திரையுலகில் பெரும் சோகம்!
SBI Bank Jobs: எஸ்பிஐ வங்கியில் நல்ல சம்பளத்துடன் 2050 வேலைவாய்ப்புகள்.. தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
SBI வங்கியில் காலியாக இருக்கும் சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBIல், வட்ட அளவிலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் 2050 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் சுமார் 165 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் பிப்ரவரி 18 ஆகும்.
* பணி பொறுப்பு: Circle Based Officers
* காலியிடங்கள் எண்ணிக்கை: 2050
* கல்வித்தகுதி: பட்டப்படிப்பு + 2 ஆண்டுகள் பணி அனுபவம்
* வயது வரம்பு: 31.12.2025 அன்று 21 வயது முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகை உண்டு
* மாத சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை
* தேர்வு முறை: எழுத்துத்தேர்வு (கணினி வழியில்), நேர்முகத்தேர்வு அடிப்படையில் நியமனம்
* எழுத்துத்தேர்வு: 2 பிரிவுகளாக நடைபெறும். Objective Test மற்றும் Descriptive Test முறையிலான தேர்வுகள்
இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!

* Objective Test: 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும், ஆங்கிலம்-30, கணினி-20, வங்கி தொடர்பான கேள்விகள்-40, பொது அறிவு & பொருளாதாரம்-30 என 120 மதிப்பெண்களுக்கு கேள்விகள் நடக்கும். கால இடைவெளி 2 மணிநேரம் ஆகும். கட்டுரை / கடிதம் தொடர்பான வினாவுக்கு 50 மதிப்பெண் கொடுக்கப்படும். கால இடைவெளி 30 நிமிடங்கள் ஆகும்.
* நேர்முகத்தேர்வு: முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் https://sbi.co.in/hi/web/careers/current-openings விண்ணப்பிக்க வேண்டும்
* விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.02.2026
* விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவு, ஓ.பி.சி & இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750/-, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
இதையும் படிங்க: SBI Bank Job: எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் வேலைவாய்ப்பு.. விபரம் இதோ.!