பாஜக- வில் எனக்குத்தான் பதவியே இல்லையே..! முதல்வர் விஜய் செயல்பாடு குறித்து சரத்குமார் அளித்த பேட்டியால்... அரசியல் களத்தில் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் இணைந்த பிறகும் தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு சரத்குமாரின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களும் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
‘பாஜகவில் எனக்குப் பதவியே இல்லையே’ – சரத்குமார் பதில்
தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார், அதன்பிறகு தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரது மனைவி ராதிகாவும் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார். இருப்பினும், இருவருக்கும் பாஜகவில் இதுவரை அதிகாரப்பூர்வப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: அதிமுக கூடாரத்தை காலி செய்த தவெக..! மகேந்திரன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைவு..! அதிர்ச்சியில் எடப்பாடி..!!!
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “எனக்குத்தான் பாஜகவில் எந்தக் கட்சிப் பதவியும் இல்லையே” என்று சரத்குமார் பதிலளித்தார். கட்சியில் பொறுப்பு இல்லாததைச் சுட்டிக்காட்டும் வகையில் அவர் கூறிய இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்குமா?
ஒருபுறம் சரத்குமாரின் பேட்டி பேசப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து பாஜக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடபடவில்லை. எனவே, தலைவர் பதவி குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கட்சியின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தவெக கூட்டணியில் பாமக..? திமுகவின் திடீர் முடிவால் திருமாவளவனுக்கு பேரதிர்ச்சி..! பரபரப்பு தகவல்..!!!