சதுரகிரிக்கு செல்ல 4 நாள் மட்டுமே அனுமதி..!! பிரதோஷம், ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு.!!



sathuragiri-temple-4-days-allowed-for-special-prayer

துரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் விஷேசம் நிறைந்த கோவில். அதிலும் பிரதோஷம் அமாவாசை என்றால் சொல்லவே வேண்டாம் கூட்டம் அலைமோதும். ஈஸ்வரனை காண பக்தர்கள் கோடி வந்து சொல்லக்கூடிய இடம் தான் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். 

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.. ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாதம் தொடக்கத்திலே வருகின்ற அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாட்டு செய்வதற்காக வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சதுரகிரி

இந்த 4 நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்திருக்கிறது. மேலும், இரவு கோவிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளன. அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.