அரசியல் தமிழகம்

சசிகலா எப்போது வெளியே வருகிறார்.? அவரது வழக்கறிஞர் வெளியிட்ட தகவலால் உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்!

Summary:

sasikala when will release

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவின் தண்டனை காலம் அடுத்த ஆண்டுதான் முடிவடைகிறது. ஆனால் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். இந்நிலையில் அவர் இந்த மாத இறுதி அல்லது, அக்டோபர் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்படுவார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ செந்தூர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய  சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ செந்தூர பாண்டியன், சசிகலா வரும் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் விடுதலை ஆவார். அதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் எங்களுக்கு வந்து சேரவில்லை. நேட்டீஸ் வந்தவுடன் நாங்கள் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.


Advertisement