தேர்தலில் தோல்வியடைந்தாலும் வாக்குறுதியை நிறைவேற்றும் சாருபாலா தொண்டைமான்!!



sarubala thondaiman helping to people


திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கான பணியில் திருச்சி   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் திருமதி சாருபாலா தொண்டமான் அவர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

 நடந்து முடிந்த திருச்சி பாராளுமன்ற தேர்தலில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்கள்  தேர்தல் பிரச்சாரத்தின் போது   அளித்த வாக்குறுதிகள் ஆன தொகுதியின் முக்கிய  பிரச்சனையான  குடிநீர்    பற்றாக்குறையை   தீர்க்க என்னால் இயன்ற உதவி செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

ammk

அவர் அளித்த வாக்குறுதியை  நிறைவேற்றும் வகையில் நேற்று முதற்கட்ட நடவடிக்கையாக  தனது சொந்த செலவில்  குடிநீர் லாரி மூலம்  புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதி மக்களுக்கு  குடிநீர் வழங்கியுள்ளார்.  மேலும் இது போன்ற பல நல்ல முயற்சிகளை  மக்களுக்காக என்றென்றும் செய்வேன் என்பதை தெரிவித்துள்ளார்.                  ammk

இந்த நிகழ்வைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டம் , அண்டக்குளம்  பகுதி மக்களுக்கு  லாரி மூலம் குடிநீர்  வழங்கும் பணியில் திருமதி சாருபாலா தொண்டைமான்  அவர்களின் மகளான செல்வி  R.ராதா நிரஞ்சனி  தொண்டைமான் அவர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றார். தேர்தலில் தோல்வியடைந்தாலும் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர்கள் செய்யும் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.