இப்படி கூட திருடுவார்களா.? சிசிடிவி காட்சிகளை பார்த்து பதறிய கடை உரிமையாளர்.!

இப்படி கூட திருடுவார்களா.? சிசிடிவி காட்சிகளை பார்த்து பதறிய கடை உரிமையாளர்.!



saree-theft

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ராமநாதபுரம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 1.20 லட்சம் மதிப்பில் உள்ள 6 விலையுயர்ந்த பட்டு புடைவைகளை திருடிய கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அவரது கடையில் சேலை வாங்குவதுபோல நடித்து 3 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் பட்டு சேலைகளை திருடிச்சென்றுள்ளனர். இந்த சிசிடிவி காட்சி பதிவுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து பட்டு சேலைகளை திருடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர்கள் ஏற்கனவே காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திருடி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட முருகன், மணிவாசகம், தனலட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

Sarees

இவர்கள் பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தம்பதி போல சென்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான விலை உயர்ந்த பட்டு சேலைகளை திருடி வந்துள்ளனர். அவ்வாறு திருடிய சேலைகளை இவர்களது வீட்டில் வைத்து திருமண பட்டு சேலை வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் விலை உயர்ந்த பட்டு சேலைகளை குறைந்த விலையில் விற்பதால் இவர்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.