மகளின் படிப்பிற்காக சேமித்த பணத்தை கொண்டு சலூன் கடைக்காரர் செய்த காரியம்! இறுதியில் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!

மகளின் படிப்பிற்காக சேமித்த பணத்தை கொண்டு சலூன் கடைக்காரர் செய்த காரியம்! இறுதியில் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!



saloon-shop-owner-daughter-as-goodwill-ambassador

மதுரை மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயது நிறைந்த இவர் சலூன்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பரவலால் நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அப்பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளர்கள் பலரும் சாப்பாடு கூட இல்லாமல் பெருமளவில் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் மோகன் தனது மகள் நேத்ராவின் படிப்புச் செலவிற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து,  சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து உதவியுள்ளார். தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நேத்ராவிற்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது கனவு.

Ambassador

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தெரியவந்த நிலையில், அவர் மன் கீ பாத் என்ற  நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நேத்ராவின் கல்வி செலவிற்காக உதவிகள் குவிய தொடங்கியது.

மேலும் நேத்ரா, மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம் சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊக்கத் தொகையாக ஒருலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.