குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த காம பூசாரி: சயனைடு கலந்து பெண் கொலை.. சேலத்தில் பகீர்.!

குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த காம பூசாரி: சயனைடு கலந்து பெண் கொலை.. சேலத்தில் பகீர்.!



Salem Tharamangalam WOmen killed 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், ஆரூர்பட்டி, சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பசவராஜின் மனைவி செல்வி (வயது 28). தம்பதிகளுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 

இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், ஓராண்டாக செல்வி குழந்தை பேறுக்காக முயற்சித்து வந்துள்ளார். அதற்கான மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் அவரை கணவர் பசவராஜ் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளார். எந்த தகவலும் தெரியாத காரணத்தால், தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம், திருமலைகிரி, பெருமாம்பட்டி பகுதியில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முட்புதரில் பெண்ணின் சடலம் இருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, சடலமாக மீட்கப்ட்டவர் மேற்கூறிய மாயமான செல்வி என்பது உறுதி செய்யப்பட்டது.

Salem

அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பெருமாம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 42) என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 25 ஆண்டுகளாக குமார் தனது தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து வழிபாடு நடத்துகிறார்.

குழந்தையின்றி தவித்த செல்வி, குழந்தை வரம் வேண்டி கடந்த 10 நாட்களாக கோவிலுக்கு வந்திருக்கிறார். பூசாரி முறையில் குமாரிடம் தனது மனக்குறையை பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்றும் கோவில் பூஜைக்கு செல்வி வர, குமார் செல்வியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்து, கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய குமார், செல்வியை பின்தொடர்ந்து சென்று சமாதானம் செய்வது போல நடித்து குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். இதனைக்குடித்த செல்வி சில நிமிடத்தில் உயிரிழந்தார்.

விசாரணையில் உண்மையை அறிந்த காவல் துறையினர் குமார், அவரின் கூட்டாளி மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.