13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
கர்ப்பிணி மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. தாய்-சேய் துள்ளத்துடிக்க உயிரிழப்பு..!

மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில், தாய்-சேய் உயிரிழந்ததால் கணவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவரின் கணவர் அஜித்குமார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பார்வதி நான்காவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பார்வதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், கணவர் அஜித் குமார் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்வதிக்கு பிறந்த பெண் சிசு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும், பார்வதியும் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் விஷயத்தை யாரிடமும் கூறாமல் பார்வதி & சிசுவின் உடலை அஜித் குமார் வீட்டிலேயே பிதைத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஊர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் விசாரணை நடத்தி அஜித் குமாரை கைது செய்துள்ளனர். தாய் - சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.