உறவினரின் வீட்டில் தீக்குளித்து கரிக்கட்டையாகி உயிரைவிட்ட இளைஞர் : திருமணமாகாத விரக்தியால் பரிதாபம்.!

உறவினரின் வீட்டில் தீக்குளித்து கரிக்கட்டையாகி உயிரைவிட்ட இளைஞர் : திருமணமாகாத விரக்தியால் பரிதாபம்.!


Salem men death for getting not marriage

திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியைச் சார்ந்தவர் மோகனசுந்தரம். இவர் கடந்த சில ஆண்டுகளாக கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கண்ணாடி கடையில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினத்தில் கோவையிலிருந்து சேலத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்த அவர், தனது உடலில் மண்ணெண்ணெயெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

Salem District

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மோகனசுந்தரம் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்த நிலையில், அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.