அக்காவுக்கா செக்ஸ் டார்ச்சர் கொடுக்குற? கொழுந்தனார் கொடூர கொலை.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்.!



Salem Man Beaten to Death After Allegedly Harassing Sister-in-Law

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பெண்ணின் சகோதரர் கொலை செய்த பரபரப்பு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

தம்பதிகள்:

Sexual Harassment Allegation Ends in Murder: சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம், நாச்சம்பட்டி, போயர் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரின் மனைவி கிருஷ்ணம்மாள். தம்பதிகளுக்கு முருகன் (வயது 41), சின்ன திருப்பதி (வயது 39) என 2 மகன்களும், முத்துப்பொன் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் சின்னத்திருப்பதி திருமணம் செய்யாமல் இருக்கிறார். முருகனுக்கு உள்ளூரில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதனிடையே, கட்டிட வேலை தொடர்பாக முருகன் அவ்வப்போது வெளியூருக்கு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

வேலை இல்லாத நபர்:

சரிவர வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்த சின்ன திருப்பதி, தாய் மற்றும் சகோதரரின் வீட்டில் சாப்பிட்டு நாட்களை கடத்தி வந்துள்ளார். இதனிடையே, உண்ட வீட்டிற்கே துரோகம் செய்வதுபோல, அண்ணியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவர், ஒருகட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை:

இந்த விஷயம் தொடர்பாக செல்வி தனது கணவர் முருகன், தனது சகோதரர் சபரி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் நேரில் வந்து பேஸ்வதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மீண்டும் நேற்று இரவு 11 மணியளவில் சின்ன திருப்பதி முருகனின் வீட்டுக்கு சென்று செல்விக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார்.

Salem

கொலையில் முடிந்த சம்பவம்:

இதனால் அதிர்ந்துபோன செல்வி மற்றும் அவரது மகன் சத்தமிடவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவிக்காக வந்துள்ளனர். செல்வியின் சகோதரர் சபரியும் அங்கு வந்துள்ளார். பின் சின்னதிருப்தியை சபரி தாக்கி இருக்கிறார். கோயில் மதில் சுவரில் தலையை முட்டவைத்துள்ளார். திருப்பதி மயங்கிவிடவே அவரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். இதனிடையே, அதிகாலையில் அவர் பேச்சு மூச்சின்றி இருப்பதை திருப்பதியின் தாய் கண்டுள்ளார்.

பின் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜலகண்டபுரம் காவல்துறையினர், சின்ன திருப்பதி மரணம் அடைந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் சபரியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: நெஞ்சு, தலையில் அடித்து கொடூர கொலை.. தந்தைக்கு மகன் செய்த படுபாதகம்.. துடிதுடிக்க பறிபோன உயிர்.!