13 வயது சிறுமியிடம் அத்துமீறிய அந்த 4 பேர்.. எல்லாம் 40+.. காட்டுக்குள் அரங்கேறிய கொடுமை அம்பலமாது எப்படி? சேலத்தில் திக்., திக்..!



13 Year Old Girl Sexually Abused by 4 Man Team in Same Village

பெண்களுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே அதிகம் பாலியல் குற்றங்கள் நடக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், கிராமத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரின் சந்தேகத்தால் 13 வயது சிறுமி கயவர்களின் கேவலமான செயலில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிகழ்வை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

காட்டுப்பகுதி:

13 Year Old Girl Sexually Harassed: சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டபுரம், அரியாகவுண்டம்பட்டி கிராமத்தில் 13 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயில்கிறார். இதனிடையே, சிறுமியை நேற்று முன்தினத்தில் மாலை நேரம், அதே பகுதியில் வசித்து வந்த முருகன் என்பவர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. தமிழகத்தில் ஷாக்.!

நேரில் பார்த்து அதிர்ச்சி:

சிறுமி மற்றும் முருகன் தனியே செல்வதை கவனித்த சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர், நேரில் சென்று மறைந்து பார்த்தபோது முருகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உறுதியானது. இதனால் பதறிப்போன பெண்மணி கூச்சலிடவே, முருகன் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

Crime news

4 பேர் கைது:

இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, முருகன் மட்டுமல்லாது 3 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுதொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் முருகன் (வயது 40), ராஜேந்திரன் (வயது 45), கோவிந்தராஜ் (வயது 39), அங்கமுத்து (வயது 62) ஆகியோர் கைது செய்யப்பட்டார். 

சிறுவன் செய்த கொடுமை:

இந்த சம்பவத்தை போல, சேலத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியிடம், 12ம் வகுப்பு பயிலும் சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி இருக்கிறார். பின் இருவரும் அடிக்கடி சந்தித்த நிலையில், சிறுவன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனை வைத்து சிறுமியை மிரட்டிய நிலையில், சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் சிறுவனை போக்ஸோவில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!