ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
குழந்தை கொடுத்து கைவிட்ட காதல் கணவன்.. பச்சிளம் குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தாய் தவிப்பு.!
காதல் கணவன் கைவிட்டு சென்றதால், மனைவி கைக்குழந்தையுடன் கணவரின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லமூப்பன்பட்டி, காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சௌமியா. இவர்கள் இருவருக்கும் 10 மாதமே ஆகும் கைக்குழந்தை பிள்ளையாக உள்ளது.
சிவப்பிரகாசம் - சௌமியா தம்பதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிவப்பிரகாசம் தனது மனைவி சௌமியாவுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் பணம் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த மாதம் சிவப்பிரகாசம் பணம் அனுப்பாத நிலையில், அதனை கேட்க கணவருக்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. இதனால் குழந்தைக்கு பால் வாங்க கூட வழியில்லாது சௌமியா அவதியடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்துபோன சௌமியா கணவரின் வீட்டிற்கு சென்று கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில், விஷயம் குறித்து சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சௌமியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை தொற்றிக்கொண்டது.